Monday, August 23, 2010

ஆரோக்கிய குறிப்பு

  • தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவிவர வேண்டும். அது தேங்காய் எண்ணெய்யாக இருந்தால் நல்லது. எண்ணெய் தடவும்போது விரல்களின் நுனியால் தலையில் அழுத்திப்பிடித்துவிட்டுத் தேய்க்க வேண்டும். அப்படி செய்தால் கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெளியில் போகிறவர்களுக்குக் கோடைக் காலத்தில் கூந்தல் வைக்கோலைப் போல் உலர்ந்துவிடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால் வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெய்யைத் தலையில் நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின்பு தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு இது மிகவும் முக்கியம்.
  • காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாற்றைத் தண்ணீரில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களை வெளிப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இரத்தம் சுத்தமாகிவிட்டால் உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
  • புகை பிடித்தால் வெற்றிலை போட்டால் அடிக்கடி காப்பி குடித்தால் பல்லில் கறை படியும். பல்லில் கறை படிந்தால் பல் அழகு கெடும் பல் கறையைப் பல் தேய்ப்பதன் மூலம் போக்க முடியாது.

No comments:

Post a Comment