Wednesday, September 1, 2010

தலை முடி செழித்து வளர

 

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்

அழகு குறிப்பு

பொடுகை விரட்ட


             காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

         அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
 
 

Monday, August 23, 2010

ஆரோக்கிய குறிப்பு

 
  • பெண்கள் வெயிலில் வெளியில் போகும்போது இருபது நிமிஷங்களுக்குமேல் தொடர்ந்து வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் கருங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.
  • அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப்பவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறவர்களும் சாக்லேட் தின்பவர்களும் காப்பி குடிப்பவர்களும் பருமனாகி விடுகிறார்கள். உடம்பு இளைக்க வேண்டும் பெருக்க கூடாது என்று நினைக்கிறவர்கள் இவற்றையெல்லாம் தொடக்கூடாது. தள்ளிவிட வேண்டும்.
  • தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிய வேண்டும்; அதில் ஒரு ஸ்பூன் தேனைக் கலக்க வேண்டும்; அதைப் பருக வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் அவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் குரல் இனிமையாக இருக்கும்.
 

ஆரோக்கிய குறிப்பு

  • தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவிவர வேண்டும். அது தேங்காய் எண்ணெய்யாக இருந்தால் நல்லது. எண்ணெய் தடவும்போது விரல்களின் நுனியால் தலையில் அழுத்திப்பிடித்துவிட்டுத் தேய்க்க வேண்டும். அப்படி செய்தால் கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெளியில் போகிறவர்களுக்குக் கோடைக் காலத்தில் கூந்தல் வைக்கோலைப் போல் உலர்ந்துவிடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால் வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெய்யைத் தலையில் நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின்பு தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு இது மிகவும் முக்கியம்.
  • காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாற்றைத் தண்ணீரில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களை வெளிப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இரத்தம் சுத்தமாகிவிட்டால் உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
  • புகை பிடித்தால் வெற்றிலை போட்டால் அடிக்கடி காப்பி குடித்தால் பல்லில் கறை படியும். பல்லில் கறை படிந்தால் பல் அழகு கெடும் பல் கறையைப் பல் தேய்ப்பதன் மூலம் போக்க முடியாது.

முக அழகு குறிப்பு

  • வயதான பெண்கள் அவசியம் தங்கள கண்களுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். மை தீட்டிக் கொள்வதால் கண்களில் உள்ள வயதான தோற்றம் போகும். இளமையான தோற்றம் வரும்.
  • நாற்பது வயதாகிவிட்ட பெண்களும்கூட இளமையுடன் இருக்கலாம். அழகுடன் இருக்கலாம். இருக்க முடியுமா? முடியும். தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழ ஜுஸ் சாப்பிட வேண்டும். நிறையச் சாப்பிடக்கூடாது. ஸ்வீட் தயிர் பால் முட்டை நெய் வெண்ணெய் மாமிசம் தேங்காய் கிழங்கு வகைகள் சாப்பிடக்கூடாது. அடிக்கடி வெயிலில் சுற்றக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் விரைவாக நடக்க வேண்டும்.
  • பெண்கள் சூடான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து அதிலிருந்து வரும் ஆவியைத் தங்கள் முகத்தில் படும்படிச் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டு முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிவிட வேண்டும். முகம் சுத்தமாகும் மிருதுவாகும் பொலிவு பெறும்.

பொதுவான குறிப்பு

         சில பெண்களுக்கு முதுகு அகலமாக இருக்கும்; தினமும் நீண்ட தூரம் நடக்க வேண்டும். நடந்தால் இவர்களுடைய முதுகின் அகலம் குறையும்; முதுகு அழகாக மாறும். 

     சில பெண்களுக்கு கன்னம் உப்பிப் போய்க் கிடக்கும். இப்படி கன்னம் பெருத்த பெண்கள் தினமும் கொஞ்ச நேரம் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உரக்கப் படிக்க வேண்டும். தினமும் வெந்நீரில் உப்பைப் போட்டு கன்னங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கன்னங்கள் வலுப்பெறுகின்றன. ஊளைச் சதை குறைகிறது. 
 
     மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி போட்டுக் கொண்டால் அவர்கள் மூக்கு பார்ப்பதற்குச் சின்னதாகத் தெரியும்.

    மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் பெண்களுக்குக் கண்களின் அழகு கொஞ்சம் குறையும் மூக்குக் கண்ணாடி அணியும் அந்தப் பெண்கள் கொஞ்சம் பட்டையாகவே தங்கள் கண் இமைகளுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும்.

Sunday, August 22, 2010

எடை குறைய


          பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

அழகு குறிப்புகள்

கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க
கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை
தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி
விடும்.  

தேவையற்ற முடிகளை நீக்க


முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை
தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம்
அழகு பெறும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை,

சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்


1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது?


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

கூந்தல் அழகுக் குறிப்புகள்

பொடுகு நீங்க
வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
 
பேன் தொல்லை நீங்க
 
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.
 
செம்பட்டை மறைய
 
·முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.

கூந்தல் அழகுக் குறிப்புகள்


                          கூந்தல் உதிர்வு

   தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

இளநரை நீங்க

(a)நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.
(b) நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
(C)சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

Friday, August 20, 2010

முடி கொட்டுவதை தடுக்க

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

         கூந்தல் உதிர்வது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம். நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள். முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.


            வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். பல நேரங்களில் கீழ்க்கண்ட ஏதாவதொரு காரணத்தாலும் முடி கொட்டக் கூடும். ஆனால் இது தற்காலிகமானது தான். முயன்றால் தவிர்த்துவிட முடியும். இறுக்கமும், இழுவையும்:.

         முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்..



கண் அழகு குறிப்பு

கண் அழகு குறிப்பு


நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்

உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்:




1. தினமும் நிறைய சீரகத் தண்ணீர் அருந்துங்கள்.


2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


3. பருத்தி ஆடையை அணியுங்கள்.


4. வெயிலில் வெளியில் செல்லும் போது sun screen லோஷன் உபயோகப்


படுத்துங்கள்.


5. மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்.

தலைமுடி அழகு குறிப்பு

தலைமுடி அழகு குறிப்பு


1. பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும்.(பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெய்யில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.)

2. பின் தலையை மசாஜ் செய்யவும்

3. 10 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு pack-ஆகப் போடவும்.(மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.)


4. மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.


இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருது வாகவும் இருக்கும்.

முகம்

முகம்:




வெய்யில் காலங்களில் எண்டுணெய்ப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில குறிப்புகள்:


நிலை 1: முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.


நிலை 2: பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.


நிலை 3: பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.)


நிலை 4: ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


நிலை 5: கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும் இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

Thursday, August 19, 2010

சித்த மருத்துவ அழகு குறிப்புகள்

  • மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
  • பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
  • ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
  • பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
  • தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
  • தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
  • தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
 

சித்த மறுத்துவ அழகு குறிப்பு

  • நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
  • கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
  • தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
  • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
  • இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

 

சித்த மருத்துவ அழகு குறிப்பு

  • தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

  • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
  • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
  • பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

இய‌ற்கை ‌அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

  • குளிக்கும்போது கருப்பான இடங்களில் மட்டும் பீர்க்கங்காய் கூட்டினை வைத்து சோப்பு போட்டு தேய்த்து குளிக்கலாம்.
  • மருதாணி இலைகளை விழுதாக அரைத்து தலையில் தடவி மயிர்க்கால்களில் நன்கு ஊடுருவும்படி தேய்த்துக் கொடுக்கவும்.
  • இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.
  • சிறிதளவு ஆரஞ்சுப் பழச்சாறு எடுத்து முகத்திலும் கழுத்திலும் தடவி 5-10 நிமிடங்கள் கழித்து கழுவ உடனடி பளபளப்பு கிடைக்கும்.
  • துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் ‌பி‌த்த வெடி‌ப்பு குறையு‌ம்.
  • செம்பருத்தி பூக்களை பசைபோல அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தலையில் தடவி பின்னர் அலசவும்.



இய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

இய‌ற்கை முறை‌யிலேயே ந‌ம்மை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள ஆ‌யிர‌ம் வ‌ழிக‌ள் இரு‌க்கு‌ம்போது நம‌க்கு எ‌ன்ன கவலை... அவ‌ற்‌றி‌ல் இதோ உ‌ங்களு‌க்கான ‌சில.

  • முக அழகை முட்டையின் மஞ்சள் கருவுடன் தேனை கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
  • ‌மீத‌மிரு‌க்கு‌ம் வெ‌ள்ளையை எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று யோ‌சி‌‌க்கா‌தீ‌ர்க‌ன். அதனை தலை‌யி‌ல் தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். ‌சிற‌ந்த க‌ண்டீஷனராக இரு‌க்கு‌ம்.
  • வீட்டிலிருக்கும் போது பால் ஏடுகளை முக‌த்‌தி‌‌ல் தே‌ய்‌த்து வரவு‌ம்.

  • பன்னீரில் நனைத்த பஞ்சுத் துண்டை பத்து நிமிடங்களுக்கு க‌ண்களை‌ச் சு‌ற்‌றி வைக்கவும். கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.
  • வெந்தயத்தை விழுதாக அரைத்து தலையில் தடவி ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் எலு‌மி‌‌ச்சை சாறு கல‌ந்த ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌க்கவு‌ம். இது கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌‌த்து‌ம். எனவே பா‌ர்‌த்து செ‌ய்யவு‌ம்.
  • தேங்காய் எண்ணையை தடவி சீகைக்காய் தூள் உபயோகப்படுத்தி தலை குளிக்கவும்.

Wednesday, August 18, 2010

முக பருவை போக்க..

           அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும்

இதை தடுக்க...

1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.

எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்.

பெண்கள் சிவப்பழகை பெற

           கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்

எளிய அழகு குறிப்புகள்

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
 
* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.


எளிய அழகு குறிப்பு

  •  பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
  • பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
  •  பப்பாளி  பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
  •  புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
  •  முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

அழகுக் குறிப்புகள்

வெயிலில் செல்லும் முன் முகத்திற்கு தடவும் சன்ஸ்கிரீன் லோஷனை கையிலும் மறக்காமல் தடவவும்.

லிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்) தடவுவதற்கு முன் கோல்ட் கிரீம், மாய்ஸ்சுரைஸர் மற்றும் லிப் பாம் தடவவும்.

இது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை சேர்க்கும்.

நடக்கும் போதும்உட்காரும் போதும் தலையை நிமிர்த்தி தோள்பட்டையை பின்பக்கம் தள்ளிய படி இருக்கவும்.

உலர்ந்த காற்று மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்ளவும். நீச்சல் பயிற்சிக்குப் பின், நல்ல நீரில் குளித்து உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாக்கவும்.

அழகுக் குறிப்புகள்

கண் இமைகள் மற்றும் புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்க....

தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும்.


இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்!

அழகுக் குறிப்புகள்

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ


சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.


இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

அழகுக் குறிப்புகள்

உதடு சிவப்பாக செய்ய வேண்டியவை:


அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.


                            இவற்றிற்கான சிகிச்சை முறைகள்:

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போட்டு கொள்வது எப்படி? : சிலருக்கு தங் கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை.

அழகுக் குறிப்புகள்

உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:




கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம்.வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங் கள்


மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம். கறுத்த அழகு.

அழகுக் குறிப்புகள்

அடர்த்தியான தலைமுடிக்கு


1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.


2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,

அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.


3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.


(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.


பலன் கிடைக்கும்)

வணக்கம்

உலக தமிழர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். இந்த தளத்தின் மூலம் என்னுடைய கருத்துக்களை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.